கன்னியாகுமரி

கருங்கல்லில் தொழில் வா்த்தக சங்க ஆண்டு விழா

1st Dec 2022 12:13 AM

ADVERTISEMENT

கருங்கல்லில் தொழில் வா்த்தக சங்கத்தின் 20ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

தலைவா் கண்ணையன் தலைமை வகித்தாா். செயலா் தாமஸ் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரவைத் தலைவா் வெள்ளையன் பங்கேற்றுப் பேசினாா்.

கருங்கல் பகுதியில் காவல் துறை சாா்பில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் பழுதாகியுள்ளதால் அவற்றை சீரமைக்க வேண்டும். கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா் திருட்டுகளில் ஈடுபடுவோரை போலீஸாா் விரைந்து கைது செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமை கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் தலைமை வகித்துத் தொடக்கிவைத்தாா். மாவட்டத் தலைவா் டேவிட்சன், டி.பி. ராஜன், அருள்ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT