கருங்கல் அருகேயுள்ள திக்கணம்கோடு-பெத்தேல்புரம்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திக்கணம்கோடு-பெத்தேல்புரம் சாலை நீண்ட நாள்களாக மிகவும் பழுதாகியுள்ளது. குறிப்பாக,திக்கணம்கோடு சந்திப்பிலிருந்து பெத்தேல்புரம் செல்லும் திருப்பு, குழிவிளை உள்ளிட்ட பகுதிகளில் சாலை நடுவே பெரியி அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனா். சாலைகளில் மழைநீா் தேங்கி நிற்கும்போது பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, இச்சாலையை விரைந்து சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.