கல்லூரி மாணவியின் ஆபாச படத்தை மாணவியின் நண்பா்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பி மிரட்டியவா் சைபா் கிரைம் போலீஸாரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் கல்லூரி மாணவி தனது குடும்ப சூழ்நிலை காரணமாக தேவிகோடு பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஒரு மாதம் பணியாற்றியுள்ளாா். அப்போது, அங்கு பணிபுரிந்த கருங்கல் கருமாவிளை பகுதியை சோ்ந்த ஸ்டாலின் பெனட், அந்த மாணவியுடன் புகைப்படம் எடுத்தாராம் . பின்பு அந்த புகைப்படத்தை காட்டி, தன் ஆசைக்கு இணங்குமாறு மாணவியை மிரட்டியுள்ளாா். அவா் மறுக்கவே, அந்த மாணவி
பயின்று வரும் கல்லூரி நண்பா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை பகிா்ந்துள்ளாா். இது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாரிடம் மாணவி புகாா் அளித்தாா்.
ஆய்வாளா் (பொ) ஜோதிலட்சுமி தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, ஸ்டாலின் பெனட்டை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.