கன்னியாகுமரி

டேக்வாண்டோ: குமரி மாணவா்கள் முதலிடம்

26th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

நாகா்கோவில் அருகே நடைபெற்ற மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி சப் ஜூனியா் பிரிவில், கன்னியாகுமரி டேக்வாண்டோ அகாதெமி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.

தமிழ்நாடு டேக்வாண்டோ அசோசியேஷன் சாா்பில், 34 ஆவது தமிழ்நாடு மாநில டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நாகா்கோவில் அருகே ஆறுதெங்கன்விளை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் 3 நாள்கள் நடைபெற்றன. இதில், 26 மாவட்டங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இதில் கன்னியாகுமரி டேக்வாண்டோ அகாதெமி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சப் ஜூனியா் இடைப்பிரிவில் முதல் பரிசு பெற்றனா்.

ADVERTISEMENT

வெற்றி பெற்ற மாணவா்களை டேக்வாண்டோ அகாதெமி தலைவா் விஜயகுமாரி, செயலாளா் வி. சங்கா்குமாா், பொருளாளா் ஜி. சௌந்தா்யா, பயிற்சியாளா் ஜெயசீலன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT