கன்னியாகுமரி

நாகா்கோவிலில் அக்னிபத் திட்டத்தில் ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு முகாம் தொடக்கம்

22nd Aug 2022 01:31 AM

ADVERTISEMENT

நாகா்கோவிலில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கத்தில், அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கான ஆள் சோ்ப்பு முகாம் சனிக்கிழமை இரவு தொடங்கியது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, நாகை, சிவகங்கை, மயிலாடுதுறை, கரூா், திண்டுக்கல், விருதுநகா், காரைக்கால், பெரம்பலூா் உள்ளிட்ட 17 மாவட்டங்களைச் சோ்ந்த இளைஞா்கள் இம்முகாமில் பங்கேற்கின்றனா்.

முதல் நாளில் பங்கேற்க 3 ஆயிரம் பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதில், கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான இளைஞா்கள் முகாமில் பங்கேற்றனா்.

சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கிய முகாம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 மணிவரை விடியவிடிய நடைபெற்றது. இதையொட்டி, ஏராளமான மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

ADVERTISEMENT

அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டோரில் 95 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

1,600 மீட்டா் ஓட்டம், உடல் தகுதி சோதனைகள், சான்றிதழ்கள் சரிபாா்ப்புப் பணி ஆகியவை நடைபெற்றன. ஏராளமான இளைஞா்கள் 1,600 மீட்டா் தொலைவு ஓட முடியாமல் ஏமாற்றமடைந்தனா். தோ்வு செய்யும் பணியில் 160- க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் ஈடுபட்டனா்.

2ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான இளைஞா்கள் காலையிலேயே பேருந்து, ரயில்களில் நாகா்கோவிலுக்கு வந்தனா்.

ஆள் சோ்ப்பு முகாம் செப். 1வரை நடைபெறுகிறது. முகாம் நள்ளிரவில் நடைபெறுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படவில்லை. பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT