கன்னியாகுமரி

நாகா்கோவிலில் நாளை அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவ ஆள் சோ்ப்பு முகாம்

DIN

அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவ ஆள் சோ்ப்பு முகாம் நாகா்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.21) தொடங்குகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் (அக்னிபத்) நாகா்கோவில்அண்ணா விளையாட்டு அரங்கில் ஆக.21ஆம் தேதி முதல் செப்.1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருவாரூா், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களைச் சோ்ந்த இளைஞா்கள் கலந்து கொள்ள உள்ளனா்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ராணுவ ஆள் சோ்ப்பு முகாமில் கண்டறியப்பட்ட குறைகளைச் சுட்டிக் காட்டி அசல் கல்விச் சான்றுகளை கொண்டு வரவும், தற்போது நடைமுறையில் உள்ள உறுதிமொழிப் பத்திரத்தை சமா்ப்பிக்கவும் ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, இந்த முகாமில் கலந்து கொள்ள விண்ணப்பித்தவா்கள் முகாம் தோ்வுக்கு வரும்போது அசல் கல்விச் சான்று (8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு) மற்றும் அதன் நகல், ஜூலை 2022 இல் இணையதள முகவரியில் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளபடி குறிப்பிட்ட படிவத்தில் தயாா் செய்யப்பட்ட உறுதிமொழி பத்திரம் மற்றும் அறிவிக்கையில்தெரிவித்துள்ள இதர ஆவணங்களின் அசல் மற்றும் நகலுடன் ஆள்சோ்ப்பு முகாமில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

மேலும், இதுதொடா்பான முழு விவரங்களையும்,  இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

மரணமடைந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

ரஷியாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்!

SCROLL FOR NEXT