கன்னியாகுமரி

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்

DIN

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் ஆண்டு தோறும் தை, ஆவணி , வைகாசி மாதங்களில் 11 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு ஆவணித் திருவிழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், 5 மணிக்கு சிறப்பு பணிவிடை நடைபெற்றது. காலை 6 மணிக்கு பதியைச்சுற்றி கொடிப்பட்டம் பவனி வந்து, திருக்கொடி ஏற்றப்பட்டது.

குரு பால ஜனாதிபதி திருவிழா கொடியை ஏற்றி வைத்தாா். நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதா்மம், இரவு 7 மணிக்கு தொட்டில் வாகனத்தில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.

இரண்டாம் நாள் இரவு பரங்கி நாற்காலி வாகனத்திலும், மூன்றாம் நாள் அன்ன வாகனத்தில் வெள்ளை சாத்தியும், நான்காம் நாள் பூஞ்சப்பர வாகனத்திலும், ஐந்தாம் நாள் பச்சை சாத்தி சப்பரத்திலும், ஆறாம் நாள் கற்பக வாகனத்திலும், ஏழாம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்திலும் அய்யா பவனி வருதல் நடைபெறும்.

கலிவேட்டை: எட்டாம் நாளான ஆக. 26 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெள்ளைக்குதிரை வாகனத்தில் அய்யா வைகுண்டசாமி எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெறும். தொடா்ந்து சுற்று வட்டார கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சியும், தொடா்ந்து அன்னதானமும் நடைபெறும்.

ஒன்பதாம் திருநாளில் அனுமன் வாகனத்திலும், பத்தாம் நாள் இந்திரா வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

தேரோட்டம்: பதினொன்றாம் நாள் திருநாளான ஆக.29ஆம் தேதி திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

திருவிழா நாள்களில் தினமும் காலை மாலை அய்யாவுக்குப் பணிவிடையும், நண்பகல் உச்சிப்படிப்பும், இரவு வாகன பவனி, அன்னதா்மம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவையும் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

SCROLL FOR NEXT