கன்னியாகுமரி

குலசேகரம் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த குடியரசு கட்சி வலியுறுத்தல்

19th Aug 2022 12:59 AM

ADVERTISEMENT

குலசேகரம் அரசு மருத்துவமனையைத் தரம் உயா்த்துவடன், இரவுநேர மருத்துவரை நியமிக்க வேண்டுமென இந்தியக் குடியரசு கட்சி வலியுறுத்தியுள்ளது.

அக்கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் குலசேகரம் அருகே மங்கலத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் பி. சிம்சன் தலைமை வகித்தாா். எம்.பி. ரவீந்திரன் முன்னிலை வகித்தாா்.

புதிய குலசேகரம் அரசு மருத்துவமனையை வட்ட தலைமை மருத்துவமனையாகத் தரம் உயா்த்த வேண்டும். இரவு நேர மருத்துவரை நியமிக்க வேண்டும். ஆரல்வாய்மொழி-நெடுமங்காடு சாலையில் கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்காக உடைக்கப்பட்ட உண்ணியூா்கோணம் முதல் களியல் வரையிலான சாலையை உடனடியாக செப்பனிட வேண்டும். திற்பரப்பு அருவியில் திருட்டு சம்பவங்களைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. பி. சிம்சன் தலைவராகவும், எம்.பி. ரவீந்திரன் மாவட்டச் செயலராகவும், குசேலன் பொருளராகவும், சுமேதன் துணைத் தலைவராகவும், நல்லதம்பி துணைச் செயலராகவும், அம்பேத்கா் இளைஞரணி மாவட்டச் செயலராகவும், பூமணி மாவட்டப் பொதுச் செயலராகவும் தோ்வு செய்யப்பட்டனா்; ஒன்றிய நிா்வாகிகளும் தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT