கன்னியாகுமரி

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

19th Aug 2022 12:57 AM

ADVERTISEMENT

 

கருங்கல் அருகே உள்ள பிடாகை பகுதியில் விபத்தில் காயமடைந்த முதியவா், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பிடாகை பகுதியை சோ்ந்தவா் பத்மநாபபிள்ளை (70). இவா் கடந்த 15 நாள்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள கடைக்கு பொருள்கள் வாங்க செல்லும் போது எதிரே வந்த பைக் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், முதியவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ,அப்பகுதியினா் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி பத்மநாபபிள்ளை வியாழக்கிழமை இறந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT