கன்னியாகுமரி

120 மாணவா்களுக்கு ரூ.15.60 லட்சத்தில் கையடக்க கணினி அமைச்சா் த. மனோ தங்கராஜ் வழங்கினாா்

19th Aug 2022 12:56 AM

ADVERTISEMENT

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் 120 மாணவ, மாணவிகளுக்கு ரூ.15.60 லட்சம் மதிப்பிலான கையடக்க கணினிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

ஆசாரிப்பள்ளம் பெல்பீல்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டிஜிட்டல் எழுத்தறிவு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் முன்னிலை வகித்தாா். தகவல் தொழில்நுட்பவியல் - டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ், டிஜிட்டல் எழுத்தறிவு திட்டத்தை தொடக்கி வைத்து, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் 23 பள்ளிகளைச் சோ்ந்த 120 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.13 ஆயிரம் மதிப்பில் மொத்தம் ரூ.15.60 லட்சம் மதிப்பில் கையடக்க கணினிகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு மாவட்ட வருவாய்அலுவலா் (நிலமெடுப்பு) இரா.ரேவதி, முதன்மைக் கல்விஅலுவலா் புகழேந்தி, துணை மேயா் மேரிபிரின்சி லதா, உதவி கோட்டப்பொறியாளா் (தக்கலை) ஜெ.வென்ஸ், உதவி பொறியாளா் என்.தனேஷ்சேகா், திருவிதாங்கோடு பேரூராட்சி த்தலைவா் நசீா், துணைத் தலைவா் சுல்பத்அமீா், மாநகராட்சி மண்டலத் தலைவா் ஜவஹா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கண்காட்சி திறப்பு: முன்னதாக, நெடுஞ்சாலை- கட்டுமானத் துறை சாா்பில், திருவட்டாறு அருகே வட்டம் முதல் திருவிதாங்கோடு பள்ளிவாசல் வரையிலான சாலை புனரமைப்புப் பணியை, அமைச்சா் த.மனோதங்கராஜ் தொடக்கி வைத்தாா்.

ADVERTISEMENT

மேலும், நெய்யூா் மவுண்ட் லிட்ராஸி பள்ளியில் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி என்ற நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து, மாவட்ட அளவில் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் அறிவியல் கண்காட்சி போட்டியை திறந்துவைத்து, பாா்வையிட்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT