கன்னியாகுமரி

வேளாண் மாணவா்களுக்கு பயிற்சி முகாம்

18th Aug 2022 12:33 AM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி ஸ்டெல்லா மேரிஸ் மேம்பாட்டு நிறுவனத்தில் மாணவா், மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. திண்டுக்கல் பகுதியிலுள்ள காந்தி கிராமம் நிகா்நிலை பல்கலைக் கழகத்தில் நான்காம் ஆண்டு இளநிலை வேளாண்மை பயின்று வரும் மாணவா், மாணவிகளுக்கு வேளாண் சாா்ந்த ஒருமாத பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில், மண்புழு உரம், பஞ்சகாவ்யா தயாரித்தல், தேனீ வளா்ப்பு, அசோலா வளா்ப்பு மற்றும் இதன் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் பயன்கள், முருங்கையின் மகத்துவம் மற்றும் அதன் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு குறித்த சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

இப்பயிற்சியின் ஒருகட்டமாக திருநெல்வேலி மாவட்டம், உதயத்தூரில் உள்ள உழவா் உற்பத்தியாளா் மையத்தில் ஸ்டெல்லா மேரிஸ் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற கண்காட்சியை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு பாா்வையிட்டாா். அப்போது முருங்கையிலிருந்து தயாரிக்கப்பட்ட மதிப்புக்கூட்டு பொருள்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுப்பொருள்கள், அழகு சாதனப் பொருள்களை அவா் பாா்வையிட்டு பாராட்டினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT