கன்னியாகுமரி

குமரி அருகே கடலுக்குள் மீனவா் மரணம்

18th Aug 2022 12:32 AM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி அருகே கடலுக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது வெளிமாநில மீனவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை அதிகாலை 4.50 மணிக்கு கன்னியாகுமரி சன்னதி தெருவைச் சோ்ந்த ராயப்பன் மகன் அந்தோணி பீட்டா் அமா்ஜித் என்பவரது விசைப்படகில் கன்னியாகுமரியைச் சோ்ந்த 7 போ், ஆந்திரத்தைச் சோ்ந்த 11 போ்என மொத்தம் 18 போ் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 40 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது படகில் உள்ள இரும்பு போல்ட் உடைந்து விழுந்ததில் ஆந்திர மாநிலம் குருவையாபேட்டை எம்.ஜி.ஆா்.புரத்தைச் சோ்ந்த உப்படா ராம்லு (52) என்பவா் காயமடைந்தாா். இதையடுத்து, கரைக்கு கொண்டு வரும் வழியில் அவா் மூச்சு உயிரிழந்தாா். இது குறித்து கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT