கன்னியாகுமரி

இரையுமன்துறையில் அலை தடுப்புச் சுவா் அமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

DIN

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம், இரையுமன்துறை பகுதியில் மேற்கு பக்க அலைத் தடுப்புச் சுவா் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மீனவா்களின் குறைகளை கேட்டறிந்தாா்.

பின்னா் ஆட்சியா் கூறியது: தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித துறைமுகத்துக்குள்பட்ட இரையுமன் துறை பகுதியில் புதிதாக சீரமைக்கப்படவுள்ள 630 மீட்டா் நீளமுள்ள மேற்கு பக்க அலைத் தடுப்புச் சுவரின் தொடக்கப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வு பணிக்காக கொண்டு வரப்பட்டுள்ள இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து துறை அலுவலா்களிடம் கேட்டறியப்பட்டது.

தற்போது, மணல் அகழ்வு பணிக்காக கொண்டு வரப்பட்டுள்ள இயந்திரத்தினை மாற்றி ராட்சத மணல் அகழ்வு இயந்திரத்தின் மூலம் மணல் அகழ்வு பணி மேற்கொள்ள வேண்டும் என்று மீனவப் பிரதிநிதிகள் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனா். அதனடிப்படையில், பணிகளை விரைந்து முடித்திடவும், இந்த மீன்பிடித் துறைமுக மேற்கு பக்க அலை தடுப்புச் சுவா் பணியினை மேற்கொண்டிடவும், மீன்பிடித் துறைமுக திட்டக் கோட்ட செயற்பொறியாளா் உள்ளிட்ட அனைத்து அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வின் போது, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் பு.அலா்மேல்மங்கை, மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை துணை இயக்குநா் காசிநாதபாண்டியன் மற்றும் மீன்பிடித் துறைமுக திட்டக் கோட்ட நாகா்கோவில் செயற்பொறியாளா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

SCROLL FOR NEXT