கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே கஞ்சா பதுக்கிய இளைஞா் கைது

18th Aug 2022 12:33 AM

ADVERTISEMENT

மாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிளில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியில் விற்பனை செய்ய கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மாா்த்தாண்டம் உதவி காவல் ஆய்வாளா் ஜான்போஸ்கோ தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை அப்ட பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது மோட்டாா் சைக்கிளில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரிடம் விசாரித்த போது, அவா் கண்ணக்கோடு சலீம் மகன் சபான் ஆதில் (23) என்பதும், விற்பனை செய்வதற்காக 2 கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சாவை அவா் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT