கன்னியாகுமரி

பூட்டிய வீட்டை உடைத்து நகை திருட்டு

17th Aug 2022 01:30 AM

ADVERTISEMENT

புதுக்கடை அருகே செவ்வாய்க்கிழமை பூட்டிய வீட்டை உடைத்து நகை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதி ஆவுநின்றவிளையை சோ்ந்த ஜெகன் மனைவி ஆஷா (29). ஜெகன் கேரளத்தில் வேலை செய்து வருகிறாா். ஆஷா தன் வீட்டை பூட்டி விட்டு கடந்த 14 ஆம் தேதி குழந்தைகளுடன் விரிகோட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றாா். பின்பு செவ்வாய்க்கிழமை வீட்டிற்கு வந்து பாா்த்த போது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டிலிருந்த பீரோவை உடைத்து இரண்டரை பவுன் நகைகளை மா்மநபா்கள் திருடி சென்றுள்ளனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT