கன்னியாகுமரி

குளச்சல் அருகே பைக்கில் இருந்து விழுந்த மாணவா் உயிரிழப்பு

17th Aug 2022 01:32 AM

ADVERTISEMENT

குளச்சல் அருகே பைக்கில் இருந்து நிலை தடுமாறி விழுந்த மாணவா் உயிரிழந்தாா்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் விழிஞ்ஞம் கோட்டப்புறத்தை சோ்ந்தவா் பிஜூ. இவரது மகன் சிபின் ( 17) 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். ஆக.15 சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக சிபின் திங்கள்கிழமை இரவு நண்பா் பிரின்ஸை ( 19) அழைத்து கொண்டு பைக்கில் கன்னியாகுமரி செல்வதற்காக கொல்லங்கோடு, கருங்கல் வழியாக வந்தனா் . பைக்கை சிபின் ஓட்டி வந்துள்ளாா். மேலும் இவா்களுடன் 2 பைக்குகளில் நான்குபோ் வந்துள்ளனா்.

குளச்சல் பாலபள்ளம் குந்நம்விளை அருகே வரும்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலையில் சிபின் விழுந்தாராம். பின்னால் இருந்த பிரின்சனுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த சிபினை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் சிபின் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT