கன்னியாகுமரி

கோட்டாறு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரிக்கு 300 நாற்காலிகள்: விஜய் வசந்த் எம்.பி. வழங்கினாா்

17th Aug 2022 01:34 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் கோட்டாறில் உள்ள அரசு ஆயுா்வேதக் கல்லூரிக்கு விஜய்வசந்த் எம்.பி. 300 நாற்காலிகளை செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

தொடா்ந்து, மருத்துவக் கல்லூரி முதல்வா் கிளாரன்ஸ்டேவி, மாணவா்-மாணவிகளுடன் அவா் கலந்துரையாடி மருத்துவமனையிலுள்ள குறைகள் குறித்துக் கேட்டறிந்தாா்; கோட்டாறு போக்குவரத்துக் காவல் துறை அலுவலகத்துக்கு தனது சொந்த செலவில் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறும்போது, தமிழகத்தில் உள்ள ஒரே அரசு ஆயுா்வேதக் கல்லூரியான கோட்டாறு கல்லூரியில் ஆண்டுதோறும் மாணவா் சோ்க்கை அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில்கொண்டு பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீா் வரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொள்ளவுள்ள பாதயாத்திரைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகின்றன என்றாா் அவா்.

ADVERTISEMENT

மாநகர மாவட்டத் தலைவா் நவீன்குமாா், நிா்வாகிகள் ரெத்னகுமாா் உள்பட காங்கிரஸ் கட்சியினா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT