கன்னியாகுமரி

முன்சிறை, நடைக்காவு பகுதிகளில் இன்று மின் தடை

17th Aug 2022 01:33 AM

ADVERTISEMENT

குழித்துறை கோட்டத்துக்கு உள்பட்ட முன்சிறை, நடைக்காவு துணை மின் நிலையப் பகுதிகளில் புதன்கிழமை (ஆக. 17) மின்விநியோகம் இருக்காது.

இதுகுறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முன்சிறை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட முன்சிறை, காப்புக்காடு, மங்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, கொல்லங்கோடு, கிராத்தூா், ஐரேனிபுரம், விழுந்தயம்பலம், பைங்குளம், தேங்காய்ப்பட்டினம், ராமன்துறை, நடைக்காவு துணை மின் நிலையத்துக்கு உள்பட்டசூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூா், சூழால், பாத்திமாநகா், மெதுகும்மல், வெங்கஞ்சி, சுற்றுப்புறப் பகுதிகளில் புதன்கிழமை காலை 8 முதல் பிற்பகல் 3 மணிவரை மின்சாரம் இருக்காது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT