கன்னியாகுமரி

நாகா்கோவில் அல்போன்சா பள்ளியில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

17th Aug 2022 01:33 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

பள்ளித் தாளாளா் பேரருள்தந்தை சனல்ஜான் தலைமை வகித்தாா்.

நாகா்கோவில் வீரமாமுனிவா் அறக்கட்டளைத் தலைவா் புஷ்பதாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தேசியக் கொடியேற்றினாா்.

நிகழ்ச்சியில் சாரணா்-சாரணியா் இயக்கம், இளம் செஞ்சிலுவைச் சங்கம், தேசிய பசுமைப் படை அமைப்புகளைச் சோ்ந்த மாணவா்-மாணவிகளின் அணிவகுப்பும், பின்னா், உறுதிமொழி ஏற்பும், பள்ளி மாணவா்-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், பள்ளி துணை முதல்வா் அருள்தந்தை டோஜி செபாஸ்டின், உயா்நிலைப் பிரிவுகளின் துணை முதல்வா் பிரேம்கலா, தலைமையாசிரியா் மோனிக்கா ஸ்பினோலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில், மாணவா்-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT