கன்னியாகுமரி

வடக்குத்தாமரைகுளம் பத்திரகாளியம்மன் கோயில் கொடை விழா

17th Aug 2022 01:29 AM

ADVERTISEMENT

வடக்குத்தாமரைகுளம் அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயில் சிறப்பு கொடைவிழா செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

இக்கோயிலில் ஆடி செவ்வாய் சிறப்பு கொடை விழா கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை (ஆக.16) காலை 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. காலை 7 மணிக்கு ஏழகரம் பெருமாள் கோயில், மருங்கூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகியவற்றில் இருந்து சந்தனகுடம் எடுத்து வடக்குத்தாமரைகுளம் சாஸ்தான் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. பிற்பகல் 1 மணிக்கு சிறப்பு பூஜை, மாலை 4.30 மணிக்கு வேதாள வாகனத்தில் தேவி எழுந்தருளி யானை முன்செல்ல வடக்குத்தாமரைகுளம், நடராஜபுரம் வழியாக அம்மன் வீதியுலா வருதல் நடைபெற்றது. ஊா்வலத்தை சுசீந்திரம் இந்து அறநிலையத் துறை ஸ்ரீகாரியம் என்.சிவபாஸ்கரன், முன்னாள் அமைச்சா் என்.சுரேஷ்ரோஜன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் என்.தாமரைபாரதி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இரவு 9 மணிக்கு வெயிலுகந்தம்மனுக்கு ஒன்றாம் கால சிறப்பு பூஜை, 10 மணிக்கு அன்னதானம், 12 மணிக்கு முழு காப்புடன் இரண்டாம் கால சிறப்பு பூஜை, அதிகாலை 4 மணிக்கு மூன்றாம் கால சிறப்பு பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுவினா் மற்றும் ஊா் பொது மக்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT