கன்னியாகுமரி

முத்தலக்குறிச்சியில் கிராமசபைக் கூட்டம்

17th Aug 2022 01:31 AM

ADVERTISEMENT

முத்தலக்குறிச்சியில் 76ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் சிம்சன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கலா, தக்கலை ஊராட்சிச் செயலா் வில்லியம்ராஜ், வேளாண்மைத் துறை அலுவலா் டாா்வின், தக்கலை இலவச சட்ட உதவி மைய ஆலோசகா் வழக்குரைஞா் சிவக்குமாா், திருவிதாங்கோடு சுகாதார ஆய்வாளா் ராமதாஸ் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்கு ஒவ்வொரு ஊராட்சி மன்றத்துக்கும் ரூ. ஆயிரம் வழங்குவதை ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் 2022-23 ஆண்டுக்கான திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.

ADVERTISEMENT

முத்தலக்குறிச்சியில் வெறிநாய் தொல்லைகளை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகத்தை வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT