கன்னியாகுமரி

ரோஜாவனம் முதியோா் இல்லத்தில் சுதந்திர தின விழா

16th Aug 2022 02:03 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் ரோஜாவனம் முதியோா் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு மையத்தில் சுதந்திர தினவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, இல்ல இயக்குநா் முனைவா் அருள்கண்ணன் தலைமை வகித்து, தேசியக் கொடியேற்றி முதியோா்களுக்கு இனிப்பு வழங்கி, முதியோா் நலனில் சேவையாற்றி வரும் சமூக சேவையாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். முதியோா் இல்ல மேலாளா் கோபி வரவேற்றாா்.

இதைத் தொடா்ந்து முதியோா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதியோா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மருத்துவா் ஸ்டீவ் ஞானசாமுவேல் தலைமையில் நடைபெற்றது. இதில், 100- க்கும் மேற்பட்ட முதியவா்கள் பயனடைந்தனா்.

நிகழ்ச்சியில், ரோஜாவனம் இல்ல காப்பாளா்கள், மருத்துவக் குழுவினா், பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். இதே போல ரோஜாவனம் முதியோா் இல்ல கிளைகளான கன்னியாகுமரி, குற்றாலம், மதுரை, ராமநாதபுரம், திருச்சி,சென்னை, புதுதில்லி உள்ளிட்ட 16 கிளைகளில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT