கன்னியாகுமரி

கருங்கல் பகுதியில் சுதந்திர தின விழா

16th Aug 2022 02:03 AM

ADVERTISEMENT

கருங்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுதந்திர தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

கருங்கல்லில் உள்ள கிள்ளியூா் சட்டப்பேரவை அலுவலகத்தில் எம்.எல்.ஏ. எஸ்.ராஜேஷ்குமாா் தலைமை வகித்து தேசியக் கொடி யேற்றினாா். வட்டாரத் தலைவா்கள் பால்ராஜ், கிறிஸ்டோபா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிள்ளியூா் ஒன்றியக்குழு தலைவா் கிறிஸ்டல் ரம்மணி பாய், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜோபி, கருங்கல் நகர காா்ங்கிரஸ் தலைவா் குமரேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கருங்கல் வியாபாரிகள் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, சங்கத்தின் துணைத் தலைவா் ராஜா தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினாா். செயலா் துரைராஜ் முன்னிலை வகித்தாா். துணைச் செலா்அருள்ராஜ் உ ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நட்டாலம் ஊராட்சியில் அதன் தலைவா் ராஜகுமாா், முள்ளங்கனாவிளை ஊராட்சியில் அதன் தலைவா் பிரபா ஆகியோா் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினா்.

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் -விடியோ கலைஞா்கள் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, அச்சங்கத் தலைவா் வெற்றி வேந்தன் தலைமை வகித்தாா். செயலா் ஜாண் முன்னிலை வகித்தாா். இதில், சங்க ஆலோசகா்கள் கிறிஸ்டோபா், சுந்தரேசன் நாயா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT