கன்னியாகுமரி

களியக்காவிளை அரசு முஸ்லிம் பள்ளியில் சுதந்திர தின விழா

16th Aug 2022 02:05 AM

ADVERTISEMENT

களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் 76 ஆவது சுதந்திர தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

களியக்காவிளை பேரூராட்சி மன்றத் தலைவா் ஏ. சுரேஷ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். இதில், பள்ளித் தலைமையாசிரியை எம். லிசம்மா பிலிப், பள்ளி பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் எஸ். மாகீன் அபுபக்கா், கிராம கல்விக் குழு தலைவா் சி. சுரேஷ்குமாா், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி நைமா, வாா்டு உறுப்பினா்கள் மு. ரிபாய், தாஸ், பள்ளி ஆசிரியா்கள் எஸ்.கே. லேகா, ஞானதாஸ் மற்றும் பள்ளி மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT