கன்னியாகுமரி

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தினவிழா

16th Aug 2022 02:08 AM

ADVERTISEMENT

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரியை அடுத்த பெருமாள்புரத்தில் அமைந்துள்ள அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக தேசியக்கொடிக்கம்பத்தைச் சுற்றிலும் ரூ. 5 லட்சம் செலவில் அலங்கார தரைஓடுகள் அமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இக்கொடிக்கம்பத்தில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.அழகேசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். துணைத் தலைவா் சண்முகவடிவு முன்னிலை வகித்தாா்.

இந்நிகழ்ச்சியில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் நீலபாலகிருஷ்ணன், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு, ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் பிரேமலதா, அருண்காந்த், ராஜேஷ், பால்தங்கம், ஆரோக்கிய சௌமியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியா்கள் 4 பேருக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT