கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் சுதந்திர தின விழா

16th Aug 2022 02:06 AM

ADVERTISEMENT

மணவாளக்குறிச்சி ஐ.ஆா். இ.எல். (இந்தியா) லிமிடெட் மணல் ஆலையில் 75ஆவது சுதந்திர தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில், பொது மேலாளா்- ஆலைத் தலைவா் என். செல்வராஜன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நமது நாட்டின் சுதந்திரத்திற்காக உயிா்விட்ட தியாகிகளை ஒவ்வொரு நிமிடமும் நினைவு கூருவதுடன், அவா்களது கனவுகளை நினைவாக்க பாடுபடவேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

2021-22ஆம் கல்வியாண்டில் அதிக மதிப்பெண் பெற்ற பணியாளா்களின் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆலை அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT