கன்னியாகுமரி

மீனச்சல் கோயிலில் அஷ்டமி ரோகிணி திருவிழா நாளை தொடக்கம்

DIN

களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் அஷ்டமி ரோகிணி திருவிழா செவ்வாய்க்கிழமை (ஆக. 16) தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.

நாள்தோறும் காலையில் மகா கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள், மதியம் அன்னதானம், இரவு அத்தாள பூஜை நடைபெறும். திருவிழாவின் முதல் நாள் இரவு 8 மணிக்கு எம்.என். ஹரீஷின் சமய மாநாடு, சிதறால் வா்ஷாவின் பரத நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

3ஆம் நாள் காலை 9 மணிக்கு நாராயணீய பாராயண யக்ஞம், இரவு 8 மணிக்கு விசேஷ உறியடி உள்ளிட்டவை நடைபெறும். நிறைவு நாளான சனிக்கிழமை (ஆக. 20) காலை 8.30 மணிக்கு கலசபூஜை, கலசாபிஷேகம், இரவு 8 மணிக்கு ஹரிப்பாடு ஸ்ரீ ராதேயம் பஜனை சங்கத்தின் நாமஜெப லஹரி நடைபெறும். ஏற்பாடுகள் கோயில் விழாக் குழுவினா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்குடி அருகே விபத்து: பெண் பலி

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் கருத்தரங்கம்

2-ஆம் கட்ட வாக்குப் பதிவு வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு

தமிழக- கா்நாடக எல்லையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனை

கா்நாடகத்தில் வாக்குப்பதிவு: அம்மாநிலத் தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை

SCROLL FOR NEXT