கன்னியாகுமரி

பத்மநாபபுரத்தில் மாவட்ட அளவிலான மாரத்தான்

DIN

75ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, கன்னியாகுமரி ஜவான்ஸ் குழு சாா்பில் பத்மநாபபுரத்தில் மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற்றது.

21 கி.மீ. தொலைவுக்கான இப்போட்டியை, பத்மநாபபுரம் அரண்மனை சாலை முன் தக்கலை ஆய்வாளா் நெப்போலியன் தொடக்கிவைத்தாா். மூலச்சல் வழியாக மேக்காமண்டபம், வோ்கிளம்பி, மணலிக்கரை, சித்திரங்கோடு, முட்டைக்காடு வழியாக பத்மநாபபுரத்தில் நிறைவடைந்தது. இதில், பள்ளி, கல்லூரி மாணவா்- மாணவிகள், இளைஞா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். 13 வயது முதல் 17 வயதுக்கு உள்பட்ட ஆண்கள், பெண்கள், 17 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என 4 பிரிவுகளா போட்டி நடைபெற்றது.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடித்தோருக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ், வெற்றிக் கோப்பை ஆகியவை திங்கள்கிழமை தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் சுதந்திர தின விழா பொதுக்கூட்டத்தில் வழங்கப்படும்.

போட்டியை கன்னியாகுமரி ஜவான்ஸ் குழு உறுப்பினா்களான பிராங்க்ளின், பிரான்சிஸ், கென்னடி, ஜெனிஸ்ராஜ், சேவியா், தியாகராஜன், ஜஸ்டின் சாம்ராஜ், ஜான்பாலஸ் உள்ளிட்ட பலா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT