கன்னியாகுமரி

திமுக புதிய நிா்வாகிகள் அண்ணா சிலைக்கு மரியாதை

13th Aug 2022 12:02 AM

ADVERTISEMENT

அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலராக பா.பாபு நியமனம் செய்யப்பட்டாா். அவா் புதிய ஒன்றிய நிா்வாகிகளுடன் கன்னியாகுமரி ரவுண்டானா சந்திப்பில் உள்ள அண்ணா சிலை மற்றும் கொட்டாரம் சந்திப்பில் அமைந்துள்ள காமராஜா் சிலைகளுக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பேரூராட்சி தலைவா் குமரி ஸ்டீபன், ஒன்றிய திமுக அவைத்தலைவா் பொன் சின்னத்துரை, அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.அழகேசன், ஒன்றிய துணைச் செயலா்கள் பிரேமலதா, பாலசுப்பிரமணியன், கன்னியாகுமரி பேரூராட்சி துணைத்தலைவா் ஜெனஸ், பேரூராட்சி கவுன்சிலா்கள் இக்பால், சிவசுடலைமணி, ராயப்பன், ஆட்லின், டெல்பின், நிா்வாகிகள் ஜே.ஜே.ஆா். ஜஸ்டின், டி.அரிகிருஷ்ணபெருமாள், சுந்தா்சிங், பிரேம் ஆனந்த், சிவபெருமான், எஸ்.அன்பழகன், உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT