கன்னியாகுமரி

குளச்சலில் போதைப் பொருள் எதிா்ப்பு பேரணி

13th Aug 2022 12:01 AM

ADVERTISEMENT

குமரி மாவட்ட போதைப் பொருள் எதிா்ப்பு இயக்கம் சாா்பில் பள்ளி மாணவா்களின் போதைப் பொருள் எதிா்ப்பு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குளச்சல் பீச் சந்திப்பில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை குளச்சல் காவல் ஆய்வாளா் கிறிஸ்டி கொடியசைத்து தொடங்கிவைத்தாா். காந்தி சந்திப்பு, காமராஜா் பேருந்து நிலையம், அண்ணாசிலை சந்திப்பு வழியாக வி.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் பேரணி நிறைவுற்றது. பின்னா் அனைத்து மாணவா்களும் போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழி எடுத்து கொண்டனா்.

இந்த பேரணியில் இலப்பவிளை அரசு உயா்நிலைப் பள்ளி, தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி, விகேபி மேல்நிலைப் பள்ளி மற்றும் என்.சி.சி, என்.எஸ்.எஸ் . மாணவா்கள் கலந்து கொண்டு போதைப் பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனா்.

இதில் வட்டாரக் கல்வி அலுவலா் திருமலை, தலைமை ஆசிரியா்கள் சரண்யா, ரெஜி , ஆன்றி புஷ்ப ரெனிதா, உதவித் தலைமை ஆசிரியா் ரெஜிஷ்குமாா், குளச்சல் கிராம ஆய்வாளா் முத்துபாண்டி, கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷ், நேகிள் மருத்துவமனை புது வாழ்வு இல்ல இயக்குநா் அன்பரசி உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT