கன்னியாகுமரி

கேரளத்துக்கு கடத்த முயன்ற 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

13th Aug 2022 12:04 AM

ADVERTISEMENT

களியக்காவிளை வழியாக மினி லாரியில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 8 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் முத்துக்குமரன் தலைமையில் போலீஸாா் களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதி வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த கூண்டு கட்டிய மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். இதில் 8 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசியுடன் மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இது குறித்து வழக்குப் பதிந்த களியக்காவிளை போலீஸாா், மினி லாரி ஓட்டுநா் சிதறால் வெள்ளாங்கோடு ராகவன் மகன் ஜிவின் (29), உதவியாளா் குளப்புறம் பகுதியைச் சோ்ந்த மணி மகன் சுஜின் (26) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT