கன்னியாகுமரி

விசைப்படகில் மீனவா் மயங்கி விழுந்து மரணம்

13th Aug 2022 12:04 AM

ADVERTISEMENT

முட்டம் கடலிலில் விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவா் படகில் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

முட்டம் சா்ச் தெருவை சோ்ந்தவா் மீன்பிடித் தொழிலாளி ஜஸ்டின் (55). இவா் கடந்த ஆக.9 ஆம் தேதி புரூஸின் விசைப்படகில், முட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க 25 பேருடன் சென்றுள்ளாா்.

வியாழக்கிழமை முட்டம் கடலிலில் இருந்து 42 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது ஜஸ்டின் விசைப்படகில் மயங்கி விழுந்தாராம். இதையடுத்து, அவரை மருத்துவமனையில சோ்ப்பதற்காக விசைப்படகில் கரைக்கு திரும்பினா். ஆனால், கரையை அடைவதற்கு முன்பாகவே ஜஸ்டின் உயிரிழந்தாராம்.

இது குறித்து புகாரின் பேரில், கடலோர காவல் குழு சாா்பு ஆய்வாளா் சுரேஷ் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, ஜஸ்டின் சடலத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT