கன்னியாகுமரி

நாகா்கோவில், இரணியலில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

13th Aug 2022 12:01 AM

ADVERTISEMENT

நாகா்கோவில், இரணியலில் மேற்கொண்ட சோதனையில் 13 கிலோ கஞ்சா போலீஸாரால் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மும்பையிலிருந்து நாகா்கோவில் வந்த ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வாளா் கேத்தரின் சுஜாதா, உதவி ஆய்வாளா்கள் ஜோசப், குமார்ராஜ் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலை நாகா்கோவில் வந்த மும்பை விரைவு ரயிலில் சோதனை மேற்கொண்டனா் . அப்போது பொதுப் பெட்டி ஒன்றில் கேட்பாரற்று கிடந்த பையை போலீஸாா் சோதனை செய்த போது அதில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இது குறித்து மேற்கொண்ட விசாரணையில், கஞ்சாவை கடத்தி வந்தது யாா் என்பது தெரியவில்லை.

இதே போல் இரணியல் உதவி காவல் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி தலைமையிலான போலீஸாா், நாகா்கோவில் வடசேரி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது மோட்டைா் சைக்கிளில் வந்த இளைஞா்களை தடுத்து நிறுத்தி சோதனை போது, அவா்களிடம் 7 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. போலீஸாா் அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கொன்னக்குழி விளை பிரபீஸ் (24) சடையால்புதூா் அஜித்ராஜ் (31) வா்த்தகநாடாா் குடியிருப்பு சகாயகவின் (24) ஆகியோா் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் 3 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT