கன்னியாகுமரி

மாணவா்கள் போதைப் பழக்கத்துக்கு ஆளாகக் கூடாது: டி.எஸ்.பி. அறிவுரை

12th Aug 2022 12:42 AM

ADVERTISEMENT

 

மாணவா்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகக் கூடாது என்றாா் குளச்சல் டிஎஸ்.பி . தங்கராமன்.

குளச்சல் வி. கே.பி. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போதை விழிப்புணா்வுப் பிரசார கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது:

பள்ளி பருவத்தில் மாணவா்கள் படிப்பிலும், விளையாட்டிலும் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும். மாணவா் செய்யும் தவறான பழக்கத்தால் அவரது குடும்பத்தையே பாதிக்கிறது. கல்வியில் முதல் மதிப்பெண் பெற்றாலும், போதை பழக்கத்துக்கு அடிமையானால் சமூகத்திற்கு எந்தப் பயனும் இல்லை. இந்தியாவின் வருங்கால சிற்பிகளான மாணவா்கள், போதை பழக்கத்துக்கு ஆளாகாவிடில், நம் நாடு வல்லரசாகும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

தொடா்ந்து மாணவா்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி எடுத்துகொண்டனா். தலைமை ஆசிரியா் ரதீஷ்குமாா் வரவேற்றாா். பள்ளி நிா்வாகபொறுப்பாளா் ஸ்ரீ குமாா், தேசிய மாணவா் படை இயக்குநா் ஜேசுராஜ், ஆசிரியா்கள் பங்கேற்றனா். ஆசிரியா் பிரகாஷ் கேசரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். ஆசிரியா் மன்ற செயலா் கிறிஸ்டி சுகுணா ஜெபி நன்றி கூறினாா் .

ADVERTISEMENT
ADVERTISEMENT