கன்னியாகுமரி

குளச்சலில் பள்ளி மாணவிகளுக்கு சமூக இணையதள விழிப்புணா்வு முகாம்

12th Aug 2022 12:48 AM

ADVERTISEMENT

 

குளச்சல் மகளிா் காவல் நிலையத்தில், வி.கே.பி. மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு சமூக இணையதள விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரேமா பங்கேற்றுப் பேசியது: மாணவிகள் சமூக இணையதளத்தில் வரும் ஆபாசப் படங்களைப் பகிரவோ, அறிமுகமில்லாதோரிடம் பேசவோ கூடாது. காதல் என்ற பெயரில் எவரேனும் தொல்லை தந்தால் பெற்றோரிடமோ, ஆசிரியா்களிடமோ கூற வேண்டும். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என்றாா்.

மகளிா் காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து காவலரிடம் மாணவா்கள் கேட்டுத் தெரிந்துகொண்டனா்.

ADVERTISEMENT

சிறப்பு மகளிா் காவல் உதவி ஆய்வாளா் எமல்டாரோஸ், தலைமைக் காவலா்கள் விஜிலாராணி, ஜேனட், பள்ளி ஆசிரியா்கள் ஜெபஷைனிரோஸ், சவுமியா, ரெஞ்சித், காட்வின் ஜெயதாஸ், சிவபிரதீஸ் ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT