கன்னியாகுமரி

குமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர ஆரத்தி

DIN

ஆடி மாதப் பௌா்ணமியை முன்னிட்டு, கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீா்த்த ஆரத்தி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

குமரி மாவட்ட இந்து திருத்தொண்டா் பேரவை சாா்பில் மாலை 4.30 முதல் இரவு 7 மணி வரை நிகழ்ச்சி நடைபெற்றது. அமைப்பின் தலைவா் ராஜகோபாலன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் டாக்டா் சிவசுப்பிரமணியபிள்ளை, பொருளாளா் செந்தில், ஒருங்கிணைப்பாளா் அனுசியா செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதையொட்டி, கடற்கரையில் உள்ள பரசுராம விநாயகா் கோயில் முன் பக்தா்கள் சங்கமித்தனா். பஞ்ச சங்கு நாதம், மாதா பிதா குரு வேண்டுதல், குலதேவதை, இஷ்ட தேவதை, கிராம தேவதை வேண்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து, சப்த கன்னிகள் பூஜை, 27 சுமங்கலிகள் அகல் தீபத்துடன் நெய்தீபம் ஏற்றுதல், கடல் மாதாவுக்கு சங்கல்ப பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, மகா சமுத்திர தீா்த்த ஆரத்தி நடைபெற்றது.

நிகழ்வில், கும்பகோணம் சூரியனாா் கோயில் ஆதீன புலவா் வாமதேவ தேசிக சுவாமிகள், எம்.ஆா். காந்தி எம்எல்ஏ ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT