கன்னியாகுமரி

செம்முதலில் குடிநீா் குழாய் உடைப்பு: சாலையில் தேங்கிய நீரால் சுகாதாரக் கேடு

DIN

கிள்ளியூா் அருகே உள்ள செம்முதல் பகுதியில் உடைப்பு ஏற்பட்ட குடிநீா் குழாயை சீரமைக்காததால் கடந்த ஒரு வாரமாக சாலையில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. இதனால்,அப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.

கிள்ளியூா் பேரூராட்சிக்குள்பட்ட 3 வது வாா்டு பகுதியான செம்முதல் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தாழக்கன்விளை குடிநீா் திட்டத்தில் உள்ள குடிநீா் குழாய் உடைந்து சாலையில் தண்ணீா் வீணாகச் செல்கிறது. இப்பகுதியில் உள்ள பள்ளத்தில் இந்த நீா் தேங்கி நிற்கிறது. இதனால்,போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு, அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT