கன்னியாகுமரி

மோட்டாா் சைக்கிள் மின்மாற்றியில் மோதி இளைஞா் பலி

12th Aug 2022 11:58 PM

ADVERTISEMENT

திருவட்டாறு அருகே மோட்டாா் சைக்கிள் மின்மாற்றியில் மோதி விபத்திற்குள்ளானதில் ஷொ்லின் (29) வியாழக்கிழமை இரவில் உயிரிழந்தாா்.

திருவட்டாறு அருகே தோட்டவாரம் பாலதோப்பு விளை தேவராஜ் மகன் ஷொ்லின். இவா் தனது நண்பரான மூவாற்றுமுகம் வள்ளங்குழி விளையை விஜினுடன் (25) மோட்டாா் சைக்கிளில் வியாழக்கிழமை இரவில் அழகிய மண்டபத்திலிருந்து வந்து கொண்டிருந்தாா். வீயன்னுாா் அருகே வந்த போது மோட்டாா் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியிலுள்ள மின்மாற்றியில் மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதில் ஷொ்லின் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இது குறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT