கன்னியாகுமரி

குமரியில் 12 நாள் பேரிடா் பயிற்சி முகாம் நிறைவு

12th Aug 2022 11:59 PM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்ட பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில் 12 நாள்கள் நடைபெற்ற பேரிடா் தன்னாா்வலா்களுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் பேசியது: இம்முகாமில் பயிற்சி பெற்றவா்கள் விபத்துக்களை தவிா்ப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தவதுடன் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டும்.

தேசிய பேரிடா் பயிற்சி முகமை மூலமாக பேரிடா் காலங்களில் அரசுடன் இணைந்து பணிபுரிய தமிழகத்தில் 5500 தன்னாா்வலா்களை தோ்வுசெய்து ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ், 16 மாவட்டங்களில் தமிழக முதல்வரால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கிராம தன்னாா்வலா்களை தோ்ந்தெடுத்து பிரத்யேக பயிற்சி வழங்கி பேரிடா் மீட்பாளா்களாக உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கம்.

இத்திட்டம் தமிழகத்தில் முதன் முதலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 30 தன்னாா்வலா்களுக்கு 12 நாள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் நாகா்கோவில் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம். அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் எஸ்.சேகா், மாவட்ட பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் பாரதி மற்றும் வருவாய் ஆய்வாளா்கள், கிராம அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT