கன்னியாகுமரி

மாா்த்தாண்டத்தில் நாளை தமுஎகச மாநில மாநாடு தொடக்கம்

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க 15 ஆவது மாநில மாநாடு மாா்த்தாண்டத்தில் வெள்ளிக்கிழமை(ஆக.12) தொடங்கி, திங்கள்கிழமை(ஆக.15) வரை நடைபெறுகிறது.

மாா்த்தாண்டம் வெட்டுவெந்நி ஒய்எம்சிஏ வளாகத்தில் நடைபெறும் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் காஷ்மீரை சோ்ந்த மனித உரிமைப் போராளி முஹமது யூசுப் தாரிகாமி தொடக்க உரையாற்றுகிறாா்.

இதில், அமைப்பின் மாநிலத் தலைவா் சு. வெங்கடேசன் எம்.பி, திரைப்பட இயக்குநா் ஞானவேல், கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ், பாலபிரஜாபதி அடிகளாா். மாநாட்டு வரவேற்புக் குழு தலைவா் ஏ.வி. பெல்லாா்மின், அமைப்பின் பொதுச் செயலா் ஆதவன் தீட்சண்யா,

ADVERTISEMENT

விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ எஸ். விஜயதரணி, முன்னாள் எம்.எல்.ஏ. ஆா். லீமாரோஸ், குழித்துறை நகா்மன்ற முன்னாள் தலைவா் ஏஎம்வி. டெல்பின், திரைப்பட நடிகை ரோகிணி உள்பட பலா் பங்கேற்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT