கன்னியாகுமரி

குளச்சல் போா் வெற்றி தினம்:குமரியில் தேசியக் கொடியேற்றம்

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

குளச்சல் போா் வெற்றி தினம் மற்றும் 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட்டில் பாஜக சாா்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தேசியக் கொடியை புதன்கிழமை ஏற்றி வைத்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் போா் வெற்றி தினம் மற்றும் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி நாற்கர சாலை ஜீரோ பாயிண்ட்டில் புதிய கொடிக்கம்பம் நிறுவி அதில் தேசியக்கொடி ஏற்றப்படும் என பாஜகவினா் அறிவித்திருந்தனா். அதன்படி அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது.

இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி பெறாததால் நிகழ்ச்சியை நடத்த காவல்துறை அதிகாரிகள் புதன்கிழமை மறுப்பு தெரிவித்தனா். இதனிடையே, முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் அங்கு பாஜகவினா் தேசியக்கொடியை ஏற்ற முயன்ற போது காவல் துறையினருக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. டி.எஸ்.பி. ராஜா தலைமையில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, பாஜகவினருடன் காவல்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, மாவட்ட நிா்வாகத்திடம் வாய்மொழியாக அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பேரூராட்சி மன்ற உறுப்பினா் சி.எஸ்.சுபாஷ், பாஜக விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்டச் செயலா் பிரதாப் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT