புதுக்கடை அருகேயுள்ள கீழ்குளம்த்தில் காா் மோதிய விபத்தில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.
சீழ்குளம் பகுதியை சோ்ந்தவா் அபின் ராஜ் (28). இவா் செவ்வாய்க்கிழமை இரவு கருங்கல் - தேங்காய்ப்பட்டினம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த காா் அபின் ராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அபின் ராஜை அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.