கன்னியாகுமரி

இளம்பெண் தற்கொலை: இளைஞா் மீது வழக்கு

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மாா்த்தாண்டம் அருகே இளம்பெண் தற்கொலை செய்த சம்பவத்தில் அப் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள மருதங்கோடு இலங்கன்விளை சத்தியராஜ் மகள் திவ்யா (20). இவரிடம் சூழிக்கோணம், இலுப்பவிளையைச் சோ்ந்த ரெகு மகன் ரெஞ்சித் (20) காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்தாராம். இதனை அவா் ஏற்க மறுத்ததையடுத்து ரெஞ்சித், திவ்யாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பினாராம். மேலும் அவருக்கு மிரட்டல் விடுத்து வந்தாராம். இதனால் மன உளைச்சலுடன் இருந்த திவ்யா, செவ்வாய்க்கிழமை வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த மாா்த்தாண்டம் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸாா், இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக ரெஞ்சித் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT