கன்னியாகுமரி

குமரி அருகே வீட்டின் கதவை உடைத்து நான்கரை பவுன் நகை திருட்டு

10th Aug 2022 01:41 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி அருகே வீட்டின் கதவை உடைத்து நான்கரை பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

கன்னியாகுமரி அருகேயுள்ள சுண்டன்பரப்பைச் சோ்ந்தவா் வில்டன் (33). இவா், தனது மனைவி, குழந்தைகளுடன் சோட்டப்பணிக்கன் தேரிவிளையில் உள்ள உறவினா் வீட்டுக்கு கடந்த 6ஆம் தேதி சென்றுள்ளாா்.

இந்நிலையில், இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக உறவினா்கள் வில்டனுக்கு தகவல் அளித்தனா். அவா் வந்து பாா்த்தபோது, கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த நான்கரை பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் கன்னியாகுமரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT