கன்னியாகுமரி

புதுக்கடை அருகே கஞ்சா விற்பனை:இரு இளைஞா்கள் கைது

10th Aug 2022 01:42 AM

ADVERTISEMENT

புதுக்கடை அருகே முன்சிறையில் கஞ்சா விற்றதாக 2 இளைஞா்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

புதுக்கடை போலீஸாா் முன்சிறை அரசு மேல்நிலைப் பள்ளி பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, சந்தேகத்தின் பேரில் அப்பகுதியைச் சோ்ந்த இருவரைப் பிடித்தனா். விசாரணையில், அவா்கள் இம்மானுவேல் மகன் லிபின்சன்டுரோ (22), முருகன் மகன் முதின் (20) என்பதும், விற்பதற்காக 80 கிராம் கஞ்சா பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT