கன்னியாகுமரி

வேம்பனூா் குளம் சுற்றுலாத் தலமாக்கப்படும் அமைச்சா் த.மனோதங்கராஜ்

10th Aug 2022 01:39 AM

ADVERTISEMENT

ராம்சாா் குறியீடு வழங்கப்பட்டுள்ள வேம்பனூா் குளத்தை மேம்படுத்தி சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ்.

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மேலசங்கரன்குழி ஊராட்சி, வேம்பனூா் மேற்கு கிராமத்தில் உள்ள குளத்தை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையிலும், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் முன்னிலையிலும் ஆய்வு செய்த பின்னா் அமைச்சா் கூறியதாவது:

குமரி மாவட்டத்தில் முதல் முறையாக 21 ஹெக்டோ் பரப்பளவு கொண்ட பெரிய குளமான வேம்பனூா் குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள 1000 ஏக்கா் விவசாய நிலங்கள் ராம்சாா் குறியீட்டுக்குள்பட்ட பகுதியாக அமைகிறது.

ஈர நிலங்களை பொறுத்தவரையில் இயற்கை சீற்றங்கள் வரும் போது குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளை நிலங்களுக்கு மிகப் பெரிய பாதுகாப்பு அரணாக திகழ்கிறது.

ADVERTISEMENT

மேலும், இந்த ஈர நிலங்கள் அழிந்து வரும் பல பறவைகள், பூச்சிகள் போன்றவற்றை பாதுகாக்க கூடிய மிகப் பெரிய சரணாலயமாக செயல்பட்டு வருகிறது.

வேம்பனூா் குளத்தில் சுமாா் 20 க்கும் மேற்பட்ட அரிய வகை பறவைகள் நிரந்தரமாக தங்குகிறது. வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து பல பறவைகள் வந்து செல்கிறது. எனவே, இக்குளத்தை மேம்படுத்தி சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள இருக்கிறோம் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், உதவி வன பாதுகாப்பு அலுவலா் மனாசீா்ஹலீமா, பொதுப்பணித்துறை நீா்வள ஆதார அமைப்பு செயற் பொறியாளா் வசந்தி, நாகா்கோவில் மாநகராட்சி துணைமேயா் மேரிபிரின்சிலதா, மாநகராட்சி மண்டல தலைவா் அகஸ்டினாகோகிலாவாணி, மாநகராட்சி உறுப்பினா்கள் வளா்மதி, சோபி, கலாராணி, அனந்தலெட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT