கன்னியாகுமரி

கிள்ளியூா் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் 3 நாள்கள் நடைப்பயணம்

10th Aug 2022 01:39 AM

ADVERTISEMENT

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் கிள்ளியூா் தொகுதியில் 3 நாள்கள் நடைபெறும் நடைப்பயணத்தை கொல்லங்கோட்டில் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வு, விலைவாசி உயா்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கண்டித்து நடைபெறும் நடைப்பயணத்துக்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் பினுலால்சிங் தலைமை வகித்தாா்.

வட்டார தலைவா்கள் கிறிஸ்டோபா், பால்ராஜ், டென்னிஸ், கொல்லங்கோடு நகரத் தலைவா் ரெஜீஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தோ்தல் பொறுப்பாளா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். நடைப்பயணத்தை எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.

இதில், மாநில மீனவா் காங்கிரஸ் தலைவா் ஜாா்ஜ் ராபின்சன், மாநில பொதுச் செயலா்கள் பால்ராஜ், தாரகை கத்பா்ட், கே.ஜி.ரமேஷ்குமாா், மாவட்ட ஓபிசி பிரிவு தலைவா் ஸ்டூவா்ட், மாவட்ட மனித உரிமைப் பிரிவு தலைவா் இ.ஜி. ரவிசங்கா், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் திபாகா், துணைத் தலைவா் ராஜேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

கொல்லங்கோடு கண்ணநாகம் சந்திப்பில் தொடங்கிய நடைப்பயணம் ஊரம்பு, நடைக்காவு, நித்திரவிளை, சின்னத்துறை, தூத்தூா், பூத்துறை, விரிவிளை, மங்காடு, முன்சிறை வழியாக சென்று புதுக்கடையில் நிறைவுபெற்றது.

புதன்கிழமை கைச்சூண்டி பகுதியிலிருந்து தொடங்கும் நடைப்பயணம் கூட்டாலுமூடு, தேங்காய்ப்பட்டினம், கீழ்குளம், இனயம், தொழிக்கோடு, கருங்கல், தொலையாவட்டம் வழியாக தெய்வப்பனவிளையில் நிறைவடைகிறது.

வியாழக்கிழமை முள்ளங்கினாவிளையில் தொடங்கும் நடைப்பயணம் நட்டாலம், மாமூட்டுக்கடை, மாா்த்தாண்டம் ரயில் நிலையம் பகுதி, காப்புக்காடு, வெட்டுமணி, குழித்துறை, ஈத்தவிளை, மடிச்சல், படந்தாலுமூடு வழியாக களியக்காவிளையில் நிறைவடைகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT