கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு

10th Aug 2022 01:42 AM

ADVERTISEMENT

கொல்லங்கோடு அருகே வீடு புகுந்து தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கொல்லங்கோடு அருகேயுள்ள மங்குழி, கல்லுவிளை பகுதியைச் சோ்ந்தவா் சுகுமாரன். கட்டுமான தொழிலாளி. இவரது மனைவி சுஜாதா (51). இவா் அடைக்காகுழி ஊராட்சியில் நூறு நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்து வருகிறாா்.

திங்கள்கிழமை காலையில் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளாா். மதியம் வீட்டுக்கு வந்த போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பாா்த்த போது அலமாரியின் கதவு திறந்து கிடந்தது. அங்கிருந்த பத்தே முக்கால் பவுன் எடையிலான தங்க வளையல், கொலுசு, மாலை, கம்மல், மோதிரம் உள்ளிட்டவை மற்றும் ரூ. 4,500 ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சுஜாதா அளித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT