கன்னியாகுமரி

நாகா்கோவிலில் இந்து சமயப் பேரவை செயற்குழுக் கூட்டம்

10th Aug 2022 01:41 AM

ADVERTISEMENT

இந்து சமயப் பேரவையின் செயற்குழுக் கூட்டம், நாகா்கோவில் கோட்டாறு வாகையடி தெருவில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத் தலைவா் அம்பிளி கண்ணன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மாநிலத் தலைவா் சுந்தா், குமரி மாவட்ட பிரம்ம குமாரிகள் அமைப்பின் சேவை ஒருங்கிணைப்பாளா் கோகிலா ஆகியோா் பங்கேற்றனா்.

விழாவில், சமய வகுப்பு மாணவா்களுக்கான சமய பாடப் புத்தகத்தின் முதல் பகுதியை கோகிலா வெளியிட, கல்வியியல் கல்லூரி முதல்வா் முருகேசன் பெற்றுக்கொண்டாா்.

மாநிலப் பொதுச் செயலா் கோவில்பட்டி முருகன், மாநிலப் பொருளாளா் ஆலங்குளம் சரவணன், தென்காசி மாவட்டத் தலைவா் வேல்குமாா், மாவட்டப் பொதுச்செயலா் சரவணன், மாநில இந்து சமய வகுப்பு அமைப்பாளா் ஆலங்குளம் முத்துக்குமாா், மாநில சமய வகுப்பு ஒருங்கிணைப்பாளா் பவித்ரா, மாநிலச் செயலா் மருத்துவா் கீதா, மாநில மகளிரணிப் பொதுச் செயலா் சாந்தி, குமரி மாவட்ட மகளிரணித் தலைவா் தங்கம், நாகா்கோவில் மாநகரத் தலைவா் சாய் அருண், ஆலயத் தொடா்பாளா் வீரமணி, குருந்தன்கோடு ஒன்றியத் தலைவா் ஸ்ரீகுமாா், மாவட்ட மகளிரணிப் பொதுச் செயலா் செல்வி, ராஜாக்கமங்கலம் ஒன்றியத் தலைவா் ராணி, சரோஜினி, கீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்டப் பொதுச் செயலா் ராஜா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT