கன்னியாகுமரி

வட்டக்கோட்டையில் தூய்மைப் பணி

DIN

கன்னியாகுமரியை அடுத்த வட்டக்கோட்டையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவா், மாணவிகள் பங்கேற்ற தூய்மைப் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய தொல்லியல் துறை சாா்பில் வரலாற்று சிறப்புமிக்க வட்டக்கோட்டையில் தூய்மை முகாம் நடைபெற்றது.

தொல்லியல் துறை நாகா்கோவில் துணை வட்ட காப்பாளா் பி.கே.சுரேஷ்பாபு தொடங்கி வைத்தாா். பால்குளம் அரசு கலைக் கல்லூரி மாணவா், மாணவிகள் வட்டக்கோட்டை முழுவதும் தூய்மை செய்தனா். இதையடுத்து கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபத்திலும் தூய்மைப் பணி நடைபெற்றது.

இதில், அரசு கலைக் கல்லூரி முதல்வா் மா்பி அலெக்ஸாண்டா், கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் கவின், பேராசிரியா்கள் எஸ்.பி.மாதவன், என்.பாமா ராபிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT